விஜய் மரம் நடுவது போல Pose கொடுக்கலாம், ஆனா விதை தல அஜித் போட்டது…! இது தல Start பண்ண Trend-U…!

11 August 2020, 10:11 pm
Quick Share

சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாளில் கொண்டாட்டங்களை தவிர்த்து வீட்டில் செடி நட்டு அதனை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

மேலும், ஜூனியர் என்டிஆர், தளபதி விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என நாமினேட் செய்திருந்தார். நம்ம விஜய் தான் கூச்ச சுபாவம் கொண்ட மனிதர் ஆச்சே, அவர் மகேஷ் பாபு சொன்னதை கேட்பாரா இல்லை பதில் சொல்லாமல் அப்படியே மௌனமாக இருந்து விடுவாரோ கேள்வியும் அனைவரது மனதிலும் இருந்தது.

இந்த Nomination விஷயம் விஜய் காதில் விழவே உடனே, விஜய் மரம் நடுவது போல Pose கொடுத்து ரசிகர்களின் மனதில் ஒரு படி மேலே சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் மிகப் பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த சந்தோஷம் தாங்கமுடியாமல் விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களிடம் சும்மா இல்லாமல், ” எங்க ஆளு பாத்தியா மரம் நட்டு நல்லது செய்றாரு, உங்க ஆளு பிரியாணி தான் செய்யுறாரு” என்று ஏளனம் பேச, எது சாக்கு என காத்துகிடந்த அஜித் ரசிகர்கள்,

உடனே ” உங்க ஆளு, மரம் நடுவது போல Pose கொடுக்கலாம், ஆனா விதை தல அஜித் போட்டது…! இது தல Start பண்ண Trend-U…!” என அஜித் பல வருடங்களுக்கு முன் மரம் நட்ட புகைப்படங்களை வெளியிட்டார்கள். அதன் பிறகு விஜய் ரசிகர்கள் கப்சிப்.

Views: - 1

0

0