30 வயசுல அந்த ஆசை வந்துச்சு… இப்போ மறுத்துப்போச்சு – ஆண்ட்ரியா சொன்னதை கேட்டு ஷாக்கான பேன்ஸ்!

Author: Rajesh
1 February 2024, 11:18 am
andrea jeremiah - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

andrea

இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார்.

அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே இசையமைப்பாளர் அனிருத்தை ரகசியமாக காதலித்தார். இந்நிலையில் ஆண்ட்ரியா சமீபத்திய பேட்டி ஒன்றில் 38 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன ஏன கேட்டதற்கு? 30 வயசு ஆகும்போது எனக்கும் திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை pressure இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த எண்ணமே எனக்கு வரவில்லை. அந்த வயசையும் தாண்டி விட்டேன்.

andrea jeremiah - updatenews360

ஆனால், இப்படி இருக்கிறதால் எனக்கு எந்த சோகமும் இல்லை. திருமணமாகி சில பேர் சந்தோஷம் இல்லாமலும் இருக்கிறார்கள். அதற்கு திருமணமாகாமலேயே சந்தோஷமாக இருந்து விடலாம்.அதனால் இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த ஐடியாவும் இல்லை என தெளிவாக கூறிவிட்டார்.

Views: - 254

0

0