பட்டைய கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள்… குரலின் வழியாக என்றும் வாழ்வார் : பாடலை பாடிய SPB குறித்து ரஜினி உருக்கம்..!!

Author: Babu Lakshmanan
4 October 2021, 7:09 pm
Rajinikantha
Quick Share

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அப்பாடலை பாடிய மறைந்த எஸ்பிபி குறித்து ரஜினிகாந்த் உருக்கமான பதிவை போட்டுள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, நடிகை நயன்தாரா, மீனா, குஷ்பு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாண்டியராஜன், லிவிங்க்ஸ்டன் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியது. கடந்தாண்டு உடல்நலக்குறைவால் காலமான எஸ்பிபி இந்தப் பாடலை பாடியுள்ளார். அவரது குரலில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனைவரும் எஸ்பிபியின் நினைவுகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், எஸ்பிபி குறித்து அண்ணாத்த படத்தின் ஹீரோ ரஜினிகாந்த் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 747

2

0