ஆர்யா பல பெண்களுக்கு டிமிக்கி கொடுத்து பாத்திருப்பீங்க… ஆனால் அவருக்கே அல்வா கொடுத்த ஹீரோயின் யார் தெரியுமா?

Author: Shree
26 July 2023, 10:42 am
trisha
Quick Share

கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட் நடிகையான சயீஷா ஐந்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கி தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் 17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர்.

சில வருடங்களாக தோல்வி படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஆர்யாவிற்கு சார்பட்டா பரமபரை திரைப்படம் கைகொடுத்து தூக்கியது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமளிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்யா குறித்து ஒரு ரகசிய தகவல் கசிந்துள்ளது. ஆம், நடிகர் ஆர்யா சயீஷாவை திருமணம் செய்வதற்கு முன்னர் பல பெண்களை காதலித்து ஏமாற்றினார். அதனால் அவர் பிளே பாய் என விமர்சிக்கப்பட்டதுண்டு. இந்த விஷயம் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், பிரபல நடிகை ஒருவர் ஆர்யாவையே காதலித்து ஏமாற்றியுள்ளார்.

அது வேறு யாரும் இல்ல நடிகை அனுஷ்கா ஷெட்டி தானாம். அனுஷ்கா ஆர்யாவுடன் சேர்ந்து இரண்டாம் உலகம், இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு ஆர்யா முதலில் காதலை சொன்னாராம். சில நாட்கள் நெருக்கமாக பழகிவிட்டு பின்னர் ஆர்யாவுக்கே அல்வா கொடுத்துவிட்டு பாகுபலி பட ஹீரோ பிரபாஸை காதலித்தார். பின்னர் அவரையும் கழட்டிவிட்டு வேறொரு தொழிலதிபரை காதலித்து திருமணம் வரை சென்று நின்றுபோனதாக உறுதி படுத்ததாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 308

0

0