ஜெர்மனி பெண்ணை ஏமாற்றினாரா ஆர்யா? காவல் ஆய்வாளர் பேட்டி

Author: Udhayakumar Raman
5 September 2021, 9:03 pm
Quick Share

ஜெர்மனியில் வாழும் தமிழ் பெண் ஒருவர் தன்னை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 70 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. அதன்பின் ஆர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடிகர் ஆர்யா பெயரை பயன்படுத்தி இரண்டு நபர்கள் ஏமாற்றியது சமீபத்தில் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனாலும் ஆர்யாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா இல்லை. ஜெர்மனி பெண்ணை ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது, அந்த செல்போன் ஆர்யாவால் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்யா மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது எனவும் , எஃப் ஐ ஆர் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் ஆர்யா மீது தவறு இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே ஆர்யா மீது தவறு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை ஆணையர் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 264

2

0