10 வருட காதல்… LIVE ‘வா ரொமன்ஸ் பண்ணி வெட்கப்பட்ட அசோக் செல்வன் – கீர்த்தி ஜோடி (வீடியோ)

Author: Shree
27 September 2023, 4:30 pm
ashok selvan keerthi pandian
Quick Share

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் புதுமண தம்பதிகள் பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். எங்கள் காதல் 10 வருடத்திற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. நாங்க மற்ற காதலர்களை போன்று good morning… good night இதெல்லாம் சொல்லிகொள்ளவே மாட்டோம். ரொம்ப mature நடந்துப்போம். அப்பறோம் நிறையே பேர் என்னோட ஸ்கின் கலர், தோற்றத்தை பற்றி கிண்டல் செய்தார்கள் என கூற உடனே அசோக் செல்வன் ” இந்த உலகத்திலே மிகவும் அழகான பெண் கீர்த்தி தான் என கூறி அவரை வெட்கப்பட வைத்தார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 340

0

0