கிங் கான் படத்தை இயக்கும் அட்லீ: ஆகஸ்டில் ஷூட்டிங்!

Author: Udhayakumar Raman
27 March 2021, 6:51 pm
Quick Share

கிங் கான் என்றழைக்கப்படும் ஷாருக்கான் படத்தை இயக்குநர் அட்லீ இயக்க இருப்பதாகவும் வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி தன்னை ஒரு மாஸ் இயக்குநராக காட்டியவர் இயக்குநர் அட்லீ. ராஜா ராணி பட த்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் பட த்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் சமந்தா ஆகியோரது நடிப்பில் வந்த தெறி படத்தை இயக்கினார். இந்தப் படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய்யின் மெர்சல் படத்தை இயக்கினார்.
மெர்சல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கவே பிகில் படத்தை கொடுத்தார்.

இந்தப் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்தது. 2 ஆண்டுகாலம் சும்மாவே இருந்த அட்லீ தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். ஆம், ஷாருக்கானை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். அட்லியின் கதை ஷாருக்கானுக்கு பிடித்துப் போக உடனே ஓகே சொல்லியிருக்கிறார் கிங் கான். இந்தப் படத்தை ஷாருக்கானே தயாரிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் அட்லி – ஷாருக்கான் காம்பினேஷனில் உருவாகும் புதிய பட த்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு, இந்தப் பட த்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி66 பட த்தை இயக்குநர் அட்லீ இயக்க இருப்பதாகவும் அண்மையில் செய்தி வெளியானது. மேலும், லோகேஷ் கனகாராஜூக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 65

0

0