DSP படத்தில் வில்லனாக நடித்தவர் பிரம்மாண்ட படத்தில் நடித்தவரா? அவரே போட்ட ட்வீட்..!

Author: Vignesh
6 December 2022, 7:00 pm

டிஎஸ்பி படத்தில் விஜய் சேதுபதி குறித்து வில்லனாக நடித்த பிரபாகரன் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் விஜய் சேதுபதி மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

vijay sethupathi  - updatenews360

இவர் என்றென்றும் மக்கள் செல்வனாக திகழ்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழிகளில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

விஜய் சேதுபதி திரைப்பயணம்:

இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படத்தில் நடித்து இருந்தார். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருந்தது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். இதனை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமனிதன் படத்தில் விஜய் சமீபத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

விஜய் சேதுபதி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் டிஎஸ்பி. இயக்குனர் பொன் ராம் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் அனு கீர்த்தி, குக் வித் கோமாளி புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், பிரபாகரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்து இருக்கிறார். படத்தில் வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

டிஎஸ்பி படம்:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு கூட பட குழுவினர் இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் பிரபாகரன். இவர் வேற யாரும் இல்லைங்க, ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்திருந்த பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் காலகேய மன்னனாக நடித்திருந்தவர் தான். இந்த படத்தின் மூலம் பிரபாகரனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகள் கிடைத்திருந்தது.

பிரபாகரன்பதிவு :

dsp - updatenews360

இவர் தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஆவார். இவர் தமிழ் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் டிஎஸ்பி படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் பிரபாகரன் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வணக்கம் நான் பாகுபலி காலகேய பிரபாகரன். இயக்குனர் பொன்ராம் சார் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாருடன் டிஎஸ்பி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் போன்று மிகச் சிறந்த கலைஞனோடு நடித்தது மிக்க மகிழ்ச்சி. லவ் யூ விஜய் சேதுபதி சார் என்று கூறி இருக்கிறார்

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 777

    1

    0