TRP-க்காக என்ன வேணா பண்ணுவியா?.. YouTube சேனலை கிழித்து தொங்கவிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..!

Author: Vignesh
18 July 2023, 12:30 pm
baakiyalakshmi-updatenews360
Quick Share

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.

bhagyalakshmi -updatenews360 2

இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ராவும் ரேஷ்மாவும் சமீபத்தில் அளித்த பேட்டியில், எது சொன்னாலும் எழுதுறாங்க 26 வருஷத்தில் இதுவரை தான் எந்த சேனலுக்கும் பேட்டி கொடுத்ததில்லை என்றும், இப்போ ரேஷ்மாவுக்காக தான் இங்கே வந்திருப்பதாகவும், நடிகை சுசித்ரா கூறியிருக்கிறார்.

baakiyalakshmi-updatenews360

மேலும், உங்கள் டிஆர்பிக்காக யூடியூப் சேனலில் ஏதேதோ போடுறீங்க எல்லாம் கண்ணால பாத்தீங்களா இதற்காக தான் பேட்டியே தான் கொடுப்பதில்லை என்றும், தெரியாமலே நம்மள பத்தி பேசுறாங்க எழுதுறாங்க அதை நிரூபிங்க என்று ஆதங்கத்தில் சந்திரமுகியாக மாறி பேசி உள்ளார் சுசித்ரா. மேலும், தனிப்பட்ட வாழ்க்கைக்காக தான் சினிமா பிரபலங்கள் பேட்டியே கொடுப்பதில்லை என்றும் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

baakiyalakshmi-updatenews360
Views: - 572

0

1