மகனுக்கு விருது வழங்கிய சித்தப்பு: வைரலாகும் புகைப்படம்!

7 March 2021, 9:51 pm
Quick Share

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சித்தப்பு – மகன் என்று அப்பா – மகன் உறவை வெளிக்காட்டி வரும் பாலாவுக்கு அவரது சித்தப்புவான பாபா பாஸ்கர் தொலைக்காட்சியில் மிகவும் நம்பிக்கைக்குரிய காமெடியனுக்கான Behindwoods Gold Icons Award விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்கப்போவது யாரு சீசன் 6 என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் பாலா. இந்த சீசனில் டைட்டில் வின்னரே இவர் தான். அதன் பிறகு அது இது எது, சூப்பர் சிங்கர், 90s Kids vs 2K Kids ஆகிய நிகழ்ச்சிகளிலும் வந்து சென்றுள்ளார்.

இது தவிர, ஜூங்கா, தும்பா, காக்டெய்ல், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹர்பஜன் சிங், லோஸ்லியா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2ஆவது சீசனில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வரும் பாலவின் காமெடி ரைமிங் டைமிங் ஒவ்வொருவரையும் வியக்க வைத்து வருகிறது. இந்த நிலையில், Behindwoods Gold Icons என்ற தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், தொலைக்காட்சியில் மிகவும் நம்பிக்கைக்குரிய காமெடியன் என்பதற்கான Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை நடன இயக்குநரும் குக் வித் கோமாளி 2ஆவது சீசன் நிகழ்ச்சியின் குக்குமான பாபா பாஸ்கர் வழங்கியுள்ளார். அப்போது, பாலாவை ஒரே தூக்காக அலேக்காக தூக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 220

1

0