ஃபுல் சரக்கில் செம்ம குத்து குத்தும் நிவேதா தாமஸ்..! வைரலாகும் வீடியோ !

2 September 2020, 9:01 pm
Quick Share

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார்.

இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ் . தற்போது அவரது நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பாடலில் டிஸ்கோ ஒன்றில் கலந்து குடித்துவிட்டு செம குத்தாட்டம் போட்டுள்ளார் நமது நிவேதா தாமஸ். இதைப்பார்த்த ரசிகர்கள் நமது நிவேதா தாமஸ்ஹா இது? என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

Views: - 0

0

0