ஆஜீத் திறந்த ஸ்டூடியோவிற்கு வந்த பாலா, ஷிவானி!

23 February 2021, 8:16 pm
Ajith Studio - Updatenews360
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஆஜீத் ஏகே சவுண்ட் வொர்க்ஸ் என்ற புதிய ஸ்டூடியோவை சென்னையில் உள்ள சூளைமேட்டில் திறந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ஆஜீத். ஆனால், அதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை ஒரு பாடகராக இந்த உலகிற்கு அறிமுகம் செய்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரியோ, ஷிவானி, பாலா, சோமு, கேப்ரில்லா, சுரேஷ், ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, ஆரி, வேல்முருகன் என்று ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரி அறிவிக்கப்பட்டார்.

சமீபத்தில் இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற டைட்டிலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஆஜீத், புதிய ஸ்டூடியோவான ஏகே சவுண்ட் வொர்க்ஸை சென்னையில் உள்ள சூளைமேட்டில் திறந்துள்ளார். இந்நிகழ்ச்சியில், கேப்ரில்லா, பாலா, ஷிவானி, சம்யுக்தா, ரியோ ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, சம்யுக்தா, பாலா, ஷிவானி, ஆஜீத், கேப்ரில்லா ஆகியோர் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பாலாவிற்கு அருகில் ஷிவாணி நிற்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகியுள்ளனர். இருவருமே காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்தி வெளியானது. இவ்வளவு ஏன், எப்போது பார்த்தாலும் ஏன் பாலா பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று ஷிவானியின் அம்மா, ஷிவானியை லெப்ட்டு, ரைட்டு வாங்கினார். அதன் பிறகு இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் வரை பாலா மற்றும் ஷிவானி இருவரும் கொஞ்சம் சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

இந்த நிலையில், மறுபடியும் பாலாவிற்கு அருகில் ஷிவானி நிற்கிறார். இதன் மூலம் மீண்டும் பாலா ஷிவானிக்கிடையில் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 8

0

0