அடடே..! சூப்பர்… ‘புக் மை ஷோ’ முன் பதிவில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்…. இதோ முழு லிஸ்ட்..!

Author: Vignesh
24 December 2022, 3:15 pm
top 5 film - updatenews360
Quick Share

புக் மை ஷோவில் 2022 ஆம் ஆண்டில் வெளியாகி முன் பதிவில் அதிக டாப் ரேட்டிங் பிடித்த படங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

தமிழில் அடங்காமை முதல் மஹான், எப்.ஐ.ஆர், வலிமை, ஹே சினாமிகா, மாறன், மன்மதலீலை, ஹாஸ்டல், விக்ரம், ஓ2, பட்டாம்பூச்சி, டி பிளாக், யானை, விருமன், கோப்ரா, பொன்னியின் செல்வன் 1, லவ் டுடே என்று கிட்டத்தட்ட 200 படங்கள் வரையில் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன. இதில் எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்ததா என்றால் இல்லை.

பொன்னியின் செல்வன், விக்ரம், பீஸ்ட், வலிமை, எதற்கும் துணிந்தவன், திருச்சிற்றம்பலம், சர்தார், லவ் டுடே, வெந்து தணிந்தது காடு, விருமன் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக நல்ல வசூல் கொத்துள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் புக் மை ஷோ முன் பதிவில் டாப் 5 இடங்கள் பிடித்த படங்கள் என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்…

நம்பர் 1: கேஜிஎஃப் சேப்டர் 2:

kgf-2-updatenews360-1

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்கில் கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என்று இந்தியா முமுவதுமே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமாக வெளியாகி நூறு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.1200 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது.

நம்பர் 2: ஆர்ஆர்ஆர்:

RRR-updatenews360

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இந்த படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக சொல்லப்படுகிறது.

நம்பர் 3: பீஸ்ட்:

beast-updatenews360-1

விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. தீவிரவாதத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் ரா ஏஜெண்டாக நடித்திருந்தார். வெறும் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்தது.

நம்பர் 4: பொன்னியின் செல்வன் 1:

Ponniyin-selvan-updatenews360 3

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், பகுதி 1. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்த இந்தப் படம் ரூ.500 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

நம்பர் 5: டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்:

doctor-strange-updatenews360

இயக்குநர் சாம் ரைமி இயக்கத்தில் எலிசபெத் ஆல்சென், சிவெடல் எஜோபேர், பெனெடிக்ட் வோங், பெனெடிக்ட் கம்பர்பேட்ஜ் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த மே 2 ஆம் தேதி திரைக்கு வந்த ஹாலிவுட் படம் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.1000 கோடி வரையில் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது.

Views: - 620

2

3