பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜுக்கு கொரொனோ தொற்று உறுதி – ஷாந்தனு உருக்கம் !

7 May 2021, 11:34 am
Quick Share

கொரோனா காரணமாக தினமும் பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் கூட இழந்து வருகிறோம். காலையில் எழுந்தால் யாருடைய மரணச் செய்திகளில் தான் விழிக்க வேண்டியதாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு ஒளிப்பதிவாளர் – இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார். நேற்று காமெடி நடிகர் பாண்டு கொரோனா வைரஸ் காரணமாக காலமானார். எஸ். பி. பி அவர்கள் கூட கொரோனா காரணமாக உயிரிழந்தார். இந்த செய்திகள் திரையுலகை மட்டுமல்லாது பொது மக்கள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தியின்படி பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரிடமும் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Views: - 166

0

1