பாரதி கண்ணம்மா என் குழந்தை இந்த பிரபலத்தின் குழந்தையை தானா? – அடடே போடும் நெட்டிசன்கள்

29 January 2021, 10:04 pm
Quick Share

சின்னத்திரையில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி ஜோடி நம்பர் ஒன் வழியாக தொகுப்பாளராக மாறி குறும்படங்களில் நடித்து பின் பெரிய திரைக்கு வந்து ஹீரோவானவர் சிவகார்த்திகேயன்.

குடும்பங்கள் கொண்டாடும் கதைகளில் நடித்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன், ரெமோ படத்தின் மூலம் பெண்ணாக வேடமிட்டு நடித்தார். அந்தப்படத்தில் நர்சாக வரும் சிவகார்த்திகேயன் ஒரு குழந்தையிடம் அதிகமாக பழகுவது போல காட்சி இருக்கும். அதே குழந்தை தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறது.

எங்கோ போய்க் கொண்டிருந்த பாரதிகண்ணம்மா தொடரை மீம் கிரியேட்டர்ஸ் சில மாதங்களுக்கு முன் குத்தகைக்கு எடுத்து அதில் வரும் கண்ணம்மா கதாபாத்திரத்தை வைத்து கலாய்த்து இருந்தார்கள். அதன்பின் பாரதிகண்ணம்மா சீரியல் அதிகம் ரீச் ஆனது. தற்போது ரெமோ படத்திலும் இந்த தொடரிலும் நடித்திருக்கும் குழந்தை யார் என்று தேடிக்கொண்டே இருந்தார்கள் நெட்டிசன்கள்.

தற்போது இந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளன. அந்த குழந்தை சின்னத்திரை நடிகர் ஷியாமின் குழந்தை தான். ஷியாம் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் நிகழ்ச்சியின் மூலம் ஃபேமஸ் ஆனார். நடிகர் மட்டும் என்னது பாடகரும் கூட. சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் மால்தோ பாடலை பாடி இருக்கிறார்.

Views: - 2

0

0