“உனக்கு கொடுக்க ஒன்னுமில்ல” இரண்டாவது திருமண நாளில் உணர்ச்சிவச பட்ட அனிதா சம்பத்..!

Author: kavin kumar
28 August 2021, 6:29 pm
Quick Share

செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.

இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ள அனிதா சம்பத், தனது சமூக வலைதள பக்கத்தில் காதல் கணவர் குறித்து உருக்கமான பதிவை பதிந்துள்ளார்.

அதில், சிறந்த கணவன், எங்கள் குடும்பத்தின் சிறந்த மருமகன்.. ஒவ்வொரு நாளும் மிஸ்டர் perfect. கடவுள் எனக்கு வாழ்க்கையில பண்ண ஒரே பெரிய நல்ல விஷயம் உன்னை சந்திக்க வைச்சதுதான். மீடியா பெண்களோட வளர்ச்சியை, திருமணம் தடுத்து விடும் என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் நம் கல்யாணத்துக்கு பிறகுதான் நான் வளர்ச்சியடைந்து உள்ளேன். இது எல்லாம் உன்னுடைய நம்பிக்கை. நீ கொடுத்த சுதந்திரம். அதுமட்டுமில்லாமல் நீ கொடுத்த ஊக்கம்தான் காரணம்.

எல்லா ஏற்ற தாழ்வுகளையும் தாண்டி நீ என்னிடம் காட்டும் அளவில்லா காதலுக்கு நன்றி. நீ எனக்கு செய்யும் எல்லாவற்றுக்கும் நன்றி. இருவரும் இணைந்து நமது கனவுகளை அடைவோம் பப்பு. என் வளர்ச்சியின் முழு காரணமாவும் இருந்துவிட்டு ஓரமாக நின்னு கை தட்டி, ரசிக்கிற உனக்கு திருப்பி கொடுக்க காதல் தவிர எதுவும் இல்லை. நம் காதல் போல் நாமும் வளர்வோம் என உருக்கமான பதிவிட்டுள்ளார்.

Views: - 615

9

3