“நீ ஆம்பிளைப் பையன் தானே?” – ஆரியிடம் மொக்கை வாங்கிய பாலாஜி

5 January 2021, 2:18 pm
Quick Share

90 ஆவது நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் மிகவும் பரபரப்பாகவும் காரசாரமாக கட்டத்தை எட்டியுள்ளது. சென்ற வாரம் freeze டாஸ்கில் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்த ஹவுஸ்மேட்ஸ் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாக்கில் நிறைய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

இதில் வெற்றி பெறும் போட்டியாளர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெறுவார். இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில், டாஸ்கில் விளையாடும்போது ஆரி ஓடி வந்து ஷிவானியிடம் இருந்து எதையோ பிடிங்கி செல்வது போல ஓடுகிறார். அப்போது பாலாஜி, “ஓடுவதுதான் உங்கள் strategy என்றால் எனக்கும் strategy செய்யத் தெரியும்” என குறுக்கில் டேபிள்களை போடுகிறார்.

மேலும் “எதற்காக ஓடுகிறீர்கள்?” என்று பாலாஜி கேட்க அதற்கு ஆரி, “ஓடிவந்து பிடிக்க வேண்டியதுதானே, நீ ஆம்பிளைப் பையன் தானே” என்று கூறுகிறார். அதோடு “இந்த மாதிரி கேம் விளையாடுவதற்கு நான் விளையாடாமல் இருக்கலாம்” என்று போய் உட்கார்ந்து விடுகிறார்.

ஏற்கனவே ஆரிக்கும் பாலாஜிக்கும் சண்டை முட்டிக்கொண்டு நிற்கும் நிலையில், இந்த மாதிரியான சம்பவங்கள் மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 32

0

0