‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா: ஆர்வக்கோளாறில் தேதியை அறிவித்துவிட்டு டெலீட் செய்த பிக்பாஸ் பிரபலம்..!

Author: Vignesh
19 December 2022, 2:05 pm

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, அதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

Varisu_UpdateNews360

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

actorvijay_updatenews360

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி குரலில் ‘ரஞ்சிதமே’, சிம்பு குரலில் ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி, யூடியூப்பில் பல மில்லியன் வீவ்ஸ்களை கடந்து புதிய சாதனை படைத்தது.

வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இருவருக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ajith and vijay - updatenews360

இந்த நிலையில் ட்விட்டரில் பதிவில் பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் ஒன்றை போட்டிருந்தார். அதில் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற இருப்பதாகவும், அதை தாம் தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் ஆர்வக்கோளாறில் ராஜு ஜெயமோகன் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

bigg boss Raju - updatenews360

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷேர் செய்ய தொடங்கிய நிலையில், அவசர அவசரமாக அந்த ட்வீட்டை டெலிட் செய்து உள்ளார். அதற்கு முக்கிய காரணம் படக்குழுவே இன்னும் அதிகாரப்பூர்வமாக இசை வெளியீட்டு விழாவை அறிவிக்காத நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளராக தேர்வான உடனேயே ஆர்வக்கோளாறில் ராஜு இப்படி செய்ததால் தான் பதிவை நீக்கியதாக பேசப்படுகிறது. இதனிடையே, அவர் டெலிட் செய்து விட்டு மன்னிப்பும் கோரி இருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.

bigg boss Raju - updatenews360
  • Radhika Apte motherhood கபாலி பட நடிகைக்கு “பெண்குழந்தை”…வாழ்த்து மழையில் தாயும் சேயும்..!
  • Views: - 434

    0

    0