தொடரும் நடிகர்களின் விவாகரத்து !! சமந்தா, தனுஷை தொடர்ந்து விவாகரத்துக்கு தயாராகும் பிரபல நடிகை !!??

Author: kavin kumar
9 February 2022, 12:32 pm
Shilpa Shetty_Actress
Quick Share

சினிமாத்துறையில் அதிக விவாகரத்துகள் நடப்பது சகிகஜமான ஒன்று . இந்தி பட உலகில் துடைங்கிய இந்த விவாகரத்து கலாசாரம் தமிழ் திரையுலகம்வரை நீண்டுள்ளது. தமிழ் சினிமாவில் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக வந்த இரு செய்திகள், சமந்தா நாகசைதன்யாவின் விவாகரத்து மற்றும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து. இந்த இரண்டு செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது , சமந்தா மற்றும் தனுஷை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது .ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் எடுக்கிறார் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியது. நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கணவர் சிறைக்கு சென்ற பொழுதே இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் பரவியது .ஆனால் அதை எல்லாம் மறுத்துவிட்டார் நடிகை ஷில்பா ஷெட்டி.

தற்போது அதே விவாகரத்து தகவல்கள் பரவிவரும் நிலையில் நடிகை ஷில்பாஷெட்டியின் கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம் .இதானாலே இவர்கள் பிரியப்போகின்றனர் என்ற செய்திகள் வலுத்து வருகின்றது .

தனது கணவரின் பெயரில் இருந்து பண்ணை வீட்டை தனது பெயருக்கு மாற்றியுள்ளாராம் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும் ஷிபாஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா தனது பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளாராம் .இதனால், பாலிவுட் திரை வட்டாரத்தில் இருவரும் இன்னும் சில மாதங்களில் பிரியவுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது .

Views: - 530

0

0