அப்போ பேட்ட, இப்போ சியான் 60: விக்ரமுக்கு இவர்தான் காஸ்டியூம் டிசைனர்!

Author: Udhayakumar Raman
27 March 2021, 2:31 pm
Quick Share

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் பிரவீன் ராஜா காஸ்டியூம் டிசைனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சியான் விக்ரம், கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்60 படத்தில் நடிக்கிறார்.
இதில், சியான் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் நடிக்கிறார். கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலமாக சியான்60 படத்தையும் தயாரிக்கிறார். முதலில் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 ஆம் தேதி தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் கோப்ரா படத்தின் ரஷ்யா படப்பிடிப்பை முடித்த சியான் விக்ரம், சென்னை திரும்பியதாக செய்தி வெளியானது.

சியான்60 படத்தில் பேட்ட படத்தில் நடித்திருந்த நடிகர் சனந்த் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக பாபி சிம்ஹாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப் படத்தில் சியானுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது சிம்ரன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிம்ரன், விக்ரம் ஆகியோர் பிதாமகன், துருவ நட்சத்திரம், இந்திரப்ரஸ்தம் என்ற மலையாள படம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம் இன்னும் திரைக்கு வரவில்லை. சியான்60 படத்தில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் துருவ் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டரான சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சியான்60 கேங்குக்கு தினேஷ் சுப்புராயன் தான் ஸ்டண்ட் இயக்குநர் என்று தெரிவித்து அவரது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், சியான்60 படம் தொடர்பாக தற்போது புதிதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப் படத்திற்கு அதுவும் சியான் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோருக்கு காஸ்டியூம் டிசைனராக பிரவீன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பட த்தில் தற்போது அவர் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக பேட்ட, கைதி, மெஹந்தி சர்கஸ், மேயாத மான், மாநகரம், மெர்குறி, ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 71

0

0