ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் மோசமாக ஆடிய குக் வித் கோமாளி பவித்திரா – வைரல் வீடியோ

8 February 2021, 1:25 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.

அதிலும் இந்தில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், ஊர் திருவிழா ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் இவர் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன பவி இதெல்லாம்?” என்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Views: - 3

0

0