கர்ணன் படத்திற்கு பிறகு நானே வருவேன் படத்தில் தனுஷுடன் இணையும் பிரபல நடிகர்…!

Author: Udhayakumar Raman
17 October 2021, 9:26 pm
Quick Share

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் ஹிட்டானது. மக்களுக்கு மிகவும் பேவரட் காம்பினேஷன் இவர்கள் இருவரும் தான். தற்போது கூட புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்களை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் அதில் தனுஷ் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் 2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கிடையில் இதே காம்பினேஷனில் நானே வருவேன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் செல்வராகவன்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் நானே வருவேன் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். தற்போது அந்த படத்தில் யோகி பாபுவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார் யோகிபாபு. மேலும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Views: - 303

1

1