உங்க படம் நல்லாவே இல்ல… காரி துப்பிய பிரபல நடிகரின் வாரிசு… அதிர்ச்சியில் செல்வராகவன்..!

Author: Vignesh
22 February 2023, 12:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் அவருக்கு நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.

selvaraghavan-STALIN. updatenews360 (1)

இதேபோன்று விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் மோகன். ஜி இயக்கத்தில் தற்போது ‘பகாசுரன்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்து தற்போது திரைக்கு வந்துள்ளது.

இயக்குநராக கலக்கிய செல்வராகவன் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். செல்வராகவனுக்கு திரையில் எப்படி ரசிகர்கள் உண்டோ அதேபோல் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திடீரென வந்து தத்துவத்தை தூவிவிட்டு சென்றுவிடுவார்.

இந்நிலையில், நடிகராக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் செல்வராகவன் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் எந்த படத்தை இயக்க போகிறார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில், செல்வராகவனிடம் தொகுப்பாளர், ‘உங்கள் படத்தை தனுஷின் மகன்கள் விமர்சனம் செய்வார்களா?’ என்று கேட்டுள்ளார்.

dhanush son- updatenews360

இதற்கு பதில் அளித்த செல்வராகவன், ” தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா இரண்டு பேரும் தான் உண்மையான விமர்சகர்கள் என்றும், அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் திரைப்படம் மோசமாக இருக்கிறது என்று வெளிப்படையாக தெரிவித்து விடுவார்கள். சில சமயங்களில் தன் படத்தை பார்த்து காரித் துப்புவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

  • 12th fail fame Vikrant Massey will leave Cinema பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Views: - 404

    0

    0