“SPB-யின் உடல்நிலை சீராக உள்ளது, யார் சொல்வதையும் நம்பாதீர்கள்” – பிரபல Trending இசையமைப்பாளர் தகவல்

21 August 2020, 9:30 pm
Quick Share

“SPB-யின் உடல்நிலை சீராக உள்ளது, யார் சொல்வதையும் நம்பாதீர்கள்” – பிரபல Trending இசையமைப்பாளர் தகவல்

பிரபல பாடகர் எஸ்பிபி CORONAவில் இருந்து முழுவதுமாக குணமாக வேண்டி வீடு திரும்ப வேண்டும் என்று நாடு முழுவதும் திரையுலக பிரபலங்கள் நேற்று கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அவர்களோடு நமது சக மக்களும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் எஸ்பிபியின் உடல்நிலை தொடர்பாக அவரது மகன் எஸ்பிபி சரணும் மருத்துவமனை நிர்வாகமும் தினமும் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மருத்துவமனை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். எல்லோரும் கடவுளிடம் நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மேம்பட்டு வருகிறது. நம் வேண்டுதல்கள் நாளுக்கு நாள் அவரது உடல்நிலையை மேம்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.