பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலம் கவலைக்கிடம் ! அதிர்ச்சியில் மக்கள்…!
14 August 2020, 8:14 pmதமிழ் சினிமாவில் பாடகர்கள் என்று எடுத்தால் அதில் முதன்மையானவர் SPB அவர்கள் தான். இவர் இல்லாமல் ஒரு ரஜினி கமல் விஜய் அஜித் படங்கள் இருக்காது. அந்தளவிற்கு ராசியான பாடகர் தான் SPB. தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி என ஒரு பெரிய ரவுண்ட் அடித்த பிரபல பாடகர் தான் நம்ம ஊரு SPB. ஏற தாழ 1 லட்சம் பாடல்கள் பாடியுள்ளார்.
இவருடைய மகன் ஆன SPB சரண் கூட பாடகர் தான். தற்போது தயாரிப்பாளராகி அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். எல்லாம் நல்லா போய்க்கொண்டிருக்கும் நிலையில், SPB அவர்களுக்கு, CORONA தொற்று வந்துள்ளது என செய்திகள் வந்தன.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “ CORONAவுக்கான லேசான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல், சளி பிரச்னை குறைந்திருக்கிறது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே நல்லது என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
மக்களும் இவர் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை திடீரென்று எஸ்பிபி அவர்களின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இவரின் உடல்நலம் சீராக கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.