“தேக்கு மர ஜன்னல் நீ தேவலோக மின்னல்” – பவானி ஸ்ரீயை தேவதை என வர்ணிக்கும் ரசிகர்கள்

Author: Udhayakumar Raman
22 March 2021, 11:05 pm
Quick Share

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ரம்மி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்கள். கடைசியாக கா/பெ ரணசிங்கம் படத்தில் கணவன் மனைவியாக நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் புதுமுகமாக பவானி ஸ்ரீ நடித்திருந்தார்.

பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை. தனது முதல் படமான க/பெ ரணசிங்கம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பவானி ஸ்ரீ. அதன்பின் நெட்பிளிக்ஸில் பாவகதைகள் எனும் ஆந்தாலஜி படம் வெளியானது. அதில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பவானி ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் செம பிஸி. அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் வட்டத்தை பெரிது படுத்தி வருகிறார். அவள் ஒரு மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோ ஷூட் நடத்தி வரும் பவானிசிங் தற்போது புடவை கட்டி வேற லெவல் அழகில் மின்னுகிறார்.

எங்கு பார்த்தாலும் கவர்ச்சி என அலுத்துப் போய் இருந்த ரசிகர்களுக்கு, இந்த புடவை புதுமை அவர்கள் கண்ணுக்கு தேவதையாக தெரிகிறது. இவரின் புகைப்படத்தை பார்த்து “தேக்கு மர ஜன்னல் நீ தேவலோக மின்னல்” என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 125

2

0