வேஷ்டிய மடிச்சு கட்டி வாத்தி கம்மிங்கான ஹர்பஜன் சிங்: வைரலாகும் வீடியோ!

4 March 2021, 9:57 pm
Quick Share

வேஷ்டிய மடிச்சு கட்டி வாத்தி கம்மிங் பாடலுக்கு படிக்கட்டிலிருந்து இறங்கி வரும் ஹர்பஜன் சிங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள புதிய படம் பிரண்ட்ஷிப். இந்தப் பட த்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ளார். ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதில், ஹர்பஜன் சிங் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். அதோடு சண்டை என்று வந்துவிட்டால் கையில் பேட்டும் கையுமாக சுற்றுகிறார்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, காதல் மற்றும் காமெடி கலந்த த்ரில்லர் படமாக பிரண்ட்ஷிப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பட த்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக பிக்பாஸ் லோஸ்லியா நடித்துள்ளார். மேலும், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், எம் எஸ் பாஸ்கர், சதீஷ், வெட்டுக்கிளி பாலா ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரண்ட்ஷிப் பட த்தின் சாங்கிற்கு எடுக்கப்பட்ட காஸ்ட்யூமில் இருக்கும் ஹர்பஜன் சிங், வாத்தி கம்மிங் பாடலுடன் நடந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், வேஷ்டி சட்டையில், கெத்தாக நடந்து வந்து வேஷ்டியை மடித்துக் காட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் வாத்தி கம்மிங் பாடலுக்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் டிரெண்டாக்கி வந்துள்ளனர்.
தமிழில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1431

3

2