சொல்லிக்க தான் சொந்தம்… விஜய்யால் பல படங்களை இழந்தேன் – வேதனையை பகிர்ந்த விக்ராந்த்!

Author: Rajesh
5 February 2024, 10:46 am

தமிழ் திரைப்பட நடிகரான விக்ராந்த் குழந்தை நட்சத்திரமாக 1991ம் ஆண்டு நடித்து அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து நெஞ்சத்தைக் கிள்ளாதே, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம், பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களில் முக்கிய நடித்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களை, நடித்தாலும் அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருகிறார். இவர் தளபதி விஜய்யின் உறவுக்கார தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், எந்த ஒரு இடத்திலும் விஜய்யின் பெயரை பயன்படுத்தாமல் தனது சொந்த முயற்சியின் மூலமாகவே முன்னேறவேண்டும் என முயற்சித்து வருகிறார். தற்ப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அண்ணன் விஜய் குறித்தும், அவரால் பல படவாய்ப்புகள் தவறவிட்டதை குறித்து கூறியுள்ளார். அதாவது தன்னை தேடி வரும் தயாரிப்பாளர் பெரும்பாலானோர் தான் விஜய்யின் தம்பி என்பதால் அவரை வைத்து படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என கேட்பார்கள். எப்படியென்றால், விஜய் என் படத்தின் ஒரு நடனம் ஆடவேண்டும், படத்தின் ப்ரோமோஷன்களுக்கு அவர் வரச்சொல்லுங்க என்றெல்லாம் கூறுவார்கள்.

நான் அவரை சார்ந்து வாய்ப்புகள் பெற கூடாது என்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்து விடுவேன். இதனால் நான் பல நல்ல நல்ல படவாய்ப்புகள் தவறவிட்டுள்ளேன் என விக்ராந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • chennai high court ordered conditional bail to actors srikanth and krishna ஸ்ரீகாந்துக்கும் கிருஷ்ணாவுக்கும் ஜாமீன் கூடாது- கறார் காட்டிய காவல்துறை! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்?