“உங்க பொண்ணுதான் ஹீரோயின், ஆனா Adjust பண்ணனும்” பிரபல நடிகையின் Me Too குற்றச்சாட்டு..!

Author: Udhayakumar Raman
1 July 2021, 9:19 pm
Quick Share

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலபேருக்கு ஃபேவரைட் ஆக இருந்தவர் கல்யாணி. அள்ளித்தந்த வானம் படத்தில் நடித்திருந்த கல்யாணி பல படங்களில் நடித்திருக்கிறார்., அதன்பின் ஜெயம் ரவியின் முதல் படமான ஜெயம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். அதுமட்டுமில்லாமல் படங்களில் நடித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வளர்ந்த பின் இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் படங்களில் நடிக்காமல் சின்னத்திரை பக்கம் ஒதுங்கியவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களில் நடித்தார். அதன்பின் ஆங்கராகவும் பணியாற்றினார். தற்போது திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டுவிட்டார்.

தற்போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நான் ஏன் மீண்டும் நடிக்க வரவில்லை என்பதை கூறியுள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கியதற்கு என்னை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே காரணம் எனக் கூறியுள்ளார். படங்களில் நடிக்க வேண்டுமென்றால் சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என சில இயக்குனர்கள் கேட்டனர். கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என என் அம்மாவிடமே கூறினர். குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரே Me too குற்றச்சாட்டை வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1355

105

28