கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோ திறந்தார் இளையராஜா – முதல் வேலையாக வெற்றிமாறன் – சூரி படத்திற்கான வேலைகள் தொடக்கம்

3 February 2021, 9:02 pm
Quick Share

நீண்ட நாட்களாக பிரசாத் ஸ்டுடியோ உடன் நடந்துகொண்டிருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இளையராஜா கோடம்பாக்கத்தில் தனக்காக புதியதாக ஒரு ஸ்டூடியோவை திறந்துள்ளார். அதன் முதல் இசை அமைப்பாக வெற்றிமாறன் சூரி விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைக்க தொடங்கியுள்ளார் இளையராஜா.

பல வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கென ஒரு ஸ்டுடியோ அமைத்து இசையமைத்து வந்த இளையராஜா அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிறிது நாட்களுக்கு முன் வெளியேறினார். அதன்பின் கோடம்பாக்கத்தில் உள்ள எம் எம் திரையரங்கத்தை விலைக்கு வாங்கினார். இன்று புதிய ஸ்டுடியோவை திறந்து வைத்து தனது புதிய படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தார்.

ஸ்டுடியோ திறப்பிற்கு பாரதிராஜா வந்திருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்திற்கு இசை அமைப்பை தொடங்கினார் இளையராஜா. இந்த படத்தில் விஜயசேதுபதி நடித்திருப்பதால் அவரும் வந்திருந்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி, “ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் ஸ்டுடியோ திறப்பிற்கு நானும் வருவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது மிகவும் சந்தோஷம். மேலும் வெற்றிமாறன் படத்தில் நடிப்பது பெரிய ஆசை. அனைத்து ஆசைகளும் கூடி வந்துள்ளது” என்று கூறினார்.

Views: - 34

0

0