முடியப் போகிறதா காஜல் அகர்வால் மார்க்கெட் – ஆருடம் சொல்லும் கோடம்பாக்கம்

18 January 2021, 11:30 pm
Quick Share

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தனது படத்தின் மூலம் பாரதிராஜா அறிமுகம் செய்துவைத்த காஜல் அகர்வால், அடுத்தடுத்து மோதி விளையாடு, பழனி போன்ற படங்களில் நடித்தார். இப்படி சின்ன படம் நடித்துக்கொண்டு இருந்தவருக்கு சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தியுடன் நான் மகான் அல்ல திரைப்படமும் தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய மகதீரா திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் முன்னணி நடிகருடன் நடிக்க ஆரம்பித்த காஜல் அகர்வால் மார்க்கெட் இன்று வேற லெவலில் இருக்கிறது.

சமீபத்தில் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால் திருமணத்திற்கு முன் பல படங்களில் கமிட்டாகி இருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த காஜல் அகர்வால் தற்போது பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். வழக்கமாக பிரபுதேவாவுடன் நடிக்கும் ஹீரோயின்கள் அந்த படத்திற்கு பின் மார்க்கெட்டை இழந்து விடுவார்கள் என்ற பேச்சு வழக்கு இருப்பதால் அந்த படத்திற்கு பிறகு காஜல் அகர்வால் பழைய மாதிரியே தொடர்வாரா இல்லை காணாமல் போவாரா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 0

0

0

1 thought on “முடியப் போகிறதா காஜல் அகர்வால் மார்க்கெட் – ஆருடம் சொல்லும் கோடம்பாக்கம்

Comments are closed.