கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி உடல்நலக் குறைவால் காலமானார்…!!!

Author: Aarthi
10 October 2020, 10:36 am
vijay reddy - updatenews360
Quick Share

பெங்களூர்: கன்னட திரைப்பட இயக்குநர் விஜய் ரெட்டி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தடபள்ளிகுடம் பகுதியில் பிறந்தவர் விஜய் ரெட்டி. கடந்த 1953ம் ஆண்டு சினிமா துறையில் நுழைந்து, இயக்குனர் விட்டலாச்சார்யாவின் கன்னட படத்தில் உதவி இயக்குனராக தனது கலைப்பயணத்தை தொடங்கினார்.

அதன்பின்னர், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல படங்களையும் விஜய் ரெட்டி இயக்கியுள்ளார். விஜய் ரெட்டி இயக்கிய படங்களில் ரங்கமகால் ரகசியா, காந்தட குடி, மயூரா மற்றும் சனாதி அப்பண்ணா ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற படங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

உடல்நலக்குறைவு காரணமாக விஜய் ரெட்டி காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 87

0

0