ஜகமே தந்திரம் படத்தில் நடித்த கார்த்திக் சுப்புராஜின் மனைவி…! அட, பேட்ட படத்திலும் நடித்தாரா..?

22 June 2021, 10:21 pm
Quick Share

தமிழ் சினிமா 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு அப்டேட்டட் வெர்சனாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பல புது புது இளம் இயக்குநர்கள் நல்ல நல்ல கதைகளோடு ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ்.

பிட்சா, ஜிகர்தண்டா, மெர்குரி, இறைவி, பேட்ட போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. அதில் தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஷ்மோ, மலையாள நடிகர் ஜோஜூ என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்த இந்த படம், மக்களிடையே
சுமாராக விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜின் மனைவி நடித்துள்ளார் என இணையத்தில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக கார்த்திக் சுப்புராஜின் தந்தை கிட்டத்தட்ட இவரின் எல்லா படத்திலும் நடித்திருப்பார். அதே போல இவரது மனைவியும் பிட்சா, பேட்ட, தற்போது ஜகமே தந்திரம் ஆகிய படங்களிலும் சின்ன காட்சிகளில் வந்து போவார். இதை கண்டுபிடித்த ரசிகர்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

Views: - 444

16

5