கயல் சீரியலில் இருந்து விலகிய நடிகை.. அடி வாங்கப்போகும் சேனரில் டிஆர்பி ரேட்டிங்!

Author: Vignesh
1 November 2022, 7:00 pm
kayal serial -updatenews360
Quick Share

கயல் சீரியலில் இருந்து தற்போது முக்கிய நடிகை ஒருவர் விலகியுள்ளார். அவருக்கு கயல் சீரியல் குழுவினர் கேக் வெட்டி வழியனுப்பி உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த நடிகை. 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப நாடகத் தொடர் தான் கயல், இந்த நிகழ்ச்சியை விஷன் டைம் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. இந்தத் தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கடின உழைப்பாளியான கயல் மட்டுமே தன் குடும்பத்தில் சம்பாதிப்பவர். அவள் வாழ்க்கையில் பல இடையூறுகளை எதிர்கொள்கிறாள்.

kayal serial -updatenews360

கயலின் தங்கையின் திருமணம், கயலின் மாமா, கயல் மீது பகை கொள்ளுதல்,கயல் வேலை செய்யும் இடத்தில் அவளுக்கு ஏற்படும் இடையூறுகள், இந்த பிரச்சனைகளை அவள் எப்படி தைரியமாக எதிர்த்து போராடுகிறாள் என்பதை சுற்றியே கதை நகர்கிறது. இந்த சீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அபி நவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார். சின்னத்திரையில் ஜோடிகளாக இருக்கும் தீபக் மற்றும் அபி நவ்யா தாங்கள் பெற்றோராக போகும் செய்தியை தங்களது instagram பக்கத்தில் அறிவித்திருந்தனர்.

kayal serial -updatenews360

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்கிற தொடரில் சுவாதி என்ற கதாபாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்தவர் அபி நவ்யா. செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையில் தொடங்கிய அவர், சீரியல்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். கயல் சீரியலில் நடித்து வந்த அவர் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு கேக் வெட்டி வழியனுப்பி உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அபி. அவரை மிகவும் மிஸ் செய்வதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 277

1

0