அசோக் சொல்வனின் மனைவி இப்படிப்பட்டவரா? நடிகைன்னு மட்டும் இல்ல அதுக்காகவும் தான் கல்யாணம்..!

Author: Vignesh
25 September 2023, 7:15 pm
keerthi pandian-updatenews360
Quick Share

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

ashok selvan

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துக்கொண்டார்.

திருநெல்வேலியில் பசுமை திருமணம் செய்து கொண்ட ஜோடியான இவர்களுக்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலக அழகி என்று கூறி கீர்த்தி பாண்டியனுடன் எடுத்த புகைப்படங்களை அசோக் செல்வன் பகிர்ந்து இருந்தார். கீர்த்தி வாய்ப்பு இல்லாமல் இருந்ததாலும், இணையதளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தார்.

keerthi pandian-updatenews360

ஆனால் கீர்த்தி பாண்டியன் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு தொழிலதிபராகவும் இருக்கிறார். சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் அப்பாவுடன் இணைந்து பங்குதாரராக இருந்து வருகிறார். சொந்த ஊரில் விவசாயம் செய்வதோடு பயிர்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்வது வரை அவருக்கு எல்லாமே அத்துப்படியாம்.

Views: - 308

3

6