மகள்கள் குறித்து உருவக் கேலி கமெண்ட்ஸ் .. ஆவேசத்தில் பொங்கிய குஷ்பூ..!

Author: Vignesh
16 April 2024, 1:38 pm
kushpoo
Quick Share

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

kushboo

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

தற்போது, சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வரும் குஷ்பு, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். 53 வயதாகும் குஷ்பு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறியது ரசிகர்கள் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இவர் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

kushboo - updatenews360

இந்நிலையில், குஷ்பூ தனது மகள்கள் குறித்து சமூக வலைதளங்களில் அதிக அளவில் பாடி சேமிங்கை எதிர்கொண்டு வருவதை குறித்து பேசியுள்ளார். அதில், அவர் குழந்தைகளாக இருக்கும் போது இருவரும் குண்டாக இருந்தனர். அப்போது, அனைவரும் பாராட்டியதாகவும், ஆனால் வளர்ந்து விட்டதும் உருவ கேலி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் தன்னுடைய அப்பாவை போலவே மிகவும் வளர்ந்துள்ள நிலையில், அதிக குண்டாக இருப்பதால் நிறைய பாடி சேமிங்கை சந்தித்து வருகிறார்கள். ஆனால், அதை எப்படி நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.

kushpoo

Views: - 97

0

0