“இவனுங்க கிட்ட இருந்து விவசாயிகளை காப்பாத்துங்கடா” விஜய் சேதுபதியின் லாபம் ட்ரெய்லர் Out !

22 August 2020, 6:33 pm
Quick Share

இந்த கத்தி படம் வந்தாலும் வந்துச்சு ஆனா ஊனா எந்த சினிமா காரன பார்த்தாலும் விவசாயிகளை வைத்து படம் பண்றேங்குற பேர்வழில விவசாயி படற கஷ்டத்தை விட படம் பார்க்கிற மக்கள் கஷ்டம் அதிகமாகிட்டே இருக்கு.

எஸ்.பி.ஜனனாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனமும், செவன் சி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெடும் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், கலையரசன், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்று விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ’லாபம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனையையும் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இந்த டிரெய்லரை கண்ட மக்கள் அலுத்து சலித்து போன இந்த கான்செப்டை வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்டுறீங்க என்று கிண்டல் அடிக்கிறார்கள்.