ச்சீ வெட்கமா இல்லையா?.. லோகேஷ் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை? தினமும் சண்டை போடும் மனைவி..!

Author: Vignesh
1 April 2024, 6:19 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh kanagaraj-updatenews360

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

மேலும் படிக்க: அவருக்காக Adjust பண்ணப் போனேன் யூஸ் பண்ணிட்டாங்க.. கதறும் பிரபல நடிகை..!

இந்நிலையில், படங்களில் பிஸியாக நடித்து வரும் சுருதிஹாசன் கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றி உள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. அதை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை கமலின் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு “இனிமேல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14ஆம் தேதி கமலின் ராஜ் கமல் நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த ஆல்பத்திற்கு சுருதிஹாசன் இசையமைக்க கமலஹாசன் வரிகள் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் புதிய அப்டேட் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆல்பத்தின் பாடலின் முழு வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாடல் வெளியீட்டு விழாவிற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளனர். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் இடம் இயக்குனராக உங்களைப் பார்த்த உங்கள் மனைவி நடிகராக பார்க்கும்போது என்ன ரியாக்ஷன் பண்ணுவார்கள் என்ன சொல்வார்கள் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

lokesh kanagaraj-updatenews360

அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்தில், இருந்து பொதுவாக என் தனிப்பட்ட கேள்விகளை ஒதுக்கி வருகிறேன். அதைப் பற்றி மட்டும் இனிமேல் பேச விரும்பவில்லை. ஏனென்றால், நான் சினிமாவிற்குள் வரும்போது அது வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். எனக்கும் உங்களுக்குமான நேரடி தொடர்பு இருக்கணும் என்று நினைக்கிறேன். பாராட்டுவதாக இருந்தாலும் சரி விமர்சிப்பதாக இருந்தாலும் சரி அதுவே போதும் என்று நினைக்கிறேன். என் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியக்கூடாது என்று நினைக்கிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.

Lokesh_Kanagaraj

இந்த நிலையில், ஸ்ருதிஹாசனுடன் மிகவும் நெருக்கமாக நடித்த லோகேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தற்போது, கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இதனால், லோகேஷ் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அவருடைய மனைவி ச்சீ வெட்கமா இல்லையா பட எடுக்க போறேன்னு சொல்லிட்டு, நடிச்சிட்டு இருக்கியா என்று கேள்வி எழுப்பி தினமும் சண்டை போட்டு வருவதாகவும் ஒரு தகவல் உலா வருவதாக பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Bhuvaneshwari spiritual journey திடீரென ஆன்மிகத்தில் குதித்த கவர்ச்சி நடிகை : இதெல்லாம் ரொம்ப தப்புமா..கவலையில் ரசிகர்கள்..!
  • Views: - 313

    0

    0