அவங்க நல்லா பண்ணலன்னா நிறைய சான்ஸ் கிடைக்கும்… படுக்கை காட்சியின் இன்பத்தை அனுபவித்து கூறிய பிரபல வில்லன்!

Author: Shree
18 August 2023, 8:27 pm

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.

அண்மையில் நான் ரெடி தான் வரவா பாடலில் கூட மன்சூர் அலிகான் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகளுடன் படுகைக்காட்சியில் வில்லனாக நடித்தது குறித்து ஓப்பனாக பேசிய அவர், பல நடிகைகளுடன் நான் படுமோசமான படுக்கை காட்சிகளில் நடித்திருக்கிறேன். குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் உடன் நடித்தது கூட அருமையாக இருந்தது. மேலும், விஜய் படமொன்றில் நடிகை ஸ்வாதியை தூக்கி பெட்டில் பொத்துன்னு போட்டு படுகைக்காட்சியில் நடித்திருக்கிறேன். அப்போது ஒரே ஒரு கேமராவை வைத்துக்கொண்டு ரீடேக், லாங் ஷாட் எல்லாம் எடுப்பாங்க. அதனால் நமக்கு நிறைய சான்ஸ் கிடைக்கும். குறிப்பா நடிகைகள் சரியா நடிக்கலன்னா ரீ டேக்கில் நிறைய சான்ஸ் கிடைக்கும் ஜாலி பண்ணிடுவேன் என நிஜ வில்லன் போன்றே பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?