32 வருஷத்துக்கு முன்னாடியே ரம்யா கிருஷ்ணனை பதம் பார்த்துட்டேன் – பிரபல நடிகர் கூறிய அதிர்ச்சி தகவல்!
Author: Shree18 ஆகஸ்ட் 2023, 8:54 மணி
தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80ஸ் , 90ஸ் களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சி கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.
போதாக்குறைக்கு, ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்த Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. தொடர்ந்து தெலுங்கு , தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். கடைசியாக ரஜினியின் மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஐட்டம் நடிகையாக நடித்திருப்பார். இதில் ஒரு காட்சியில் வில்லன் மன்சூர் அலிகானிடம் மாட்டிக்கொண்டு படுகைக்காட்சிக்கு வற்புறுத்தப்படுவார். பின்னர் தான் ஒரு கர்ப்பிணி என காலில் விழுந்து கெஞ்ச மன்சூர் அலிகான் மனம் மாறி விட்டுவிடுவார்.
இந்த படத்தின் அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், நான் பல நடிகைகளுடன் படுக்கைகாட்சிகளில் நடிகைகளை கட்டாயப்படுத்தி நடித்திருக்கிறேன். ரம்யா கிருஷ்ணனுடன் அப்படி நடித்தது நல்ல அனுபவம் என கூறி முகம் சுளிக்க வைத்துள்ளார். இன்று இவ்வளவு பெரிய மரியாதைக்குரிய நடிகையாக இருக்கும் சமயத்தில் மோசமான நினைவுகளை இப்படி பகிர்ந்திருப்பது கேட்கவே கொச்சையாக இருப்பதாக நெட்டிசன்ஸ் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
3
1