காஸ்ட்லியான மினி கூப்பர் நீ தான்: அத்துமீறிய மீரா மிதுனின் மூவி சாங்!

Author: Udhayakumar Raman
9 March 2021, 7:32 pm
Quick Share


மீரா மிதுன் நடிப்பில் உருவாகி வரும் மீரா எனும் தமிழ்செல்வி படத்தில் இடம்பெற்றுள்ள காஸ்ட்லியான மினி கூப்பர் நீ தான் என்ற பாடல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய நடிகைகளில் மீரா மிதுனும் ஒருவர். இருக்கும் இடம் தெரியாமல் இருந்த மீரா மிதுனை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 உலகம் முழுவதும் தெரியும்படி செய்துவிட்டது. இந்த நிகழ்ச்சியிலேயே சேரனை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கினார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 8 நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இவ்வளவு ஏன், தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். மேலும், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு மீரா எனும் தமிழ்செல்வி என்று டைட்டில் வைத்துள்ளார். இதே டைட்டிலையும் தனது டுவிட்டர் பக்கத்திற்கும் வைத்துள்ளார். அண்மையில், கூட வைகைப்புயல் வடிவேலுவை தனது படத்தில் விருப்பம் இருந்தால் நடிக்க வரலாம் என அழைத்திருந்தார் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில், மீரா எனும் தமிழ்செல்வி படத்தின் டைட்டில் டிராக் காஸ்ட்லியான மினி கூப்பர் நீ தான் பாடல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் மீரா மிதுன் அத்துமீறி நடித்துள்ளார். ஆம், அரைகுறை ஆடையுடன் பப்பில் நின்று நடனம் ஆடுகிறார். கானா பாடகர் கானா பத்ரி இந்தப் பாடலை பாடியுள்ளார். டெல்லியில் இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Views: - 337

0

1