அசினுக்கே விபூதி அடித்த பிரபல நடிகை.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. தீயாய் பரவும் புகைப்படம்..!

Author: Vignesh
28 February 2023, 10:30 am
Quick Share

கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

காவலன் படத்தில் படம் முழுவதும் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்தவரை யாராலும் மறக்க முடியாது. காவலன் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யை சந்தித்து நான் தான் உன் அம்மு குட்டி என்று விஜய்யை திருமணம் செய்து கொண்டு அசினுக்கு விபூதி அடித்து அல்வா கொடுத்து இருப்பார்.

asin - updatenews360

காவலன் படத்தில் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழுகு சீரியலில் நடித்தவர் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மித்ரா தான். நடிகை மித்ரா குரியன் 1989 இல் கேரளாவில் பிறந்த இவர் தனது திரைப்பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார்.

Mithra Kurian -updatenews360

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் நெருங்கிய சொந்தக்காரறான நடிகை மித்ரா குரியன் முதன் முதலில் 2004 இல் மலையாளத்தில் அவருடன் விஷவயாதும்பது என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார். அதனையடுத்து மலையாளத்தில் 2005 வெளியான மயோகம் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

asin - updatenews360

அதன் பிறகு தனது பட்டப்படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார். பின்னர் தமிழில் 2008 வெளியான சாது மி.ரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Mithra Kurian -updatenews360

ஜி தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘பிரியசகி’ என்ற தொடரில் நடித்து வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஆந்திரா மெஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mithra Kurian -updatenews360
Views: - 280

1

0