நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” படத்தில் இருந்து வெளியான காமெடி ஸ்னீக் பீக் !

13 November 2020, 12:00 pm
Quick Share

கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது. திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை மேற்கொண்டு இருக்கும் கதைக்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது. இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும்.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி தீபாவளி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் காமெடி ஸ்னீக் பீக் காட்சி ஒன்று யூடியூபில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. படத்தின் டிரெய்லர், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்து வருகிறது.

Views: - 34

0

0