“எங்களுக்கு வல்லவன் படத்துல பார்த்த நயன்தாராதான் வேணும்” – ஸ்லிம் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

15 April 2021, 10:16 pm
Quick Share

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு கவர்ச்சி காட்டி உச்ச நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், நயன்தாராவும் அதை கடைபிடிக்க போகிறாராம். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் முடியாத ஒரு விஷயம் என்று கூறினார். விரைவில் திருமணம் செய்ய போகும் நடிகை நயன்தாரா முடிந்த வரை படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இனி அஜித், விஜய், ரஜினி என ஸ்டார்ஸ் படங்கள் மட்டுமில்லாமல், சின்ன ஹீரோ படம்னாலும், ஓகே சொல்கிறார் அம்மணி. சமீபத்தில் இவர் காதலர் விக்கி இயக்கத்தில் இவர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதாவது விஷு பண்டிகையை முன்னிட்டு கேரளா புடவை அணிந்து கொண்டு தன்னுடைய ஒல்லியான உடற்கட்டு தெரியும் படி சில போட்டோக்களை க்ளிக் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ” என்னங்க இப்படி ஒல்லி ஆகிட்டீங்க, எங்களுக்கு பழைய வல்லவன் பட புஷ்ட்டியான நயன் வேணும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 51

7

4