இத நோட் பண்ணீங்களா? .. உதயநிதி குறித்து பேட்டியில் உளறி கொட்டிய நிவேதா பெத்துராஜ்..!(வீடியோ)

Author: Vignesh
9 மார்ச் 2024, 4:06 மணி
nivetha pethuraj - updatenews360
Quick Share

மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்து அழகு பொம்மையாக கோலிவுட்டில் அறிமுகம் ஆகி ஒட்டுமொத்த இளசுகளின் மனதிலும் ஆழமான இடத்தை தக்கவைத்தவைத்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார்.

nivetha pethuraj - updatenews360

இதனால் தெலுங்கு பக்கம் செல்ல அங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். ஆம், மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். திரைப்படங்களை தாண்டி தாண்டி தனக்கு பிடித்த கார் ரேஸில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அத்துடன் பாட்மிண்டன் விளையாட்டிலும் ஈடுபாடு காட்டி வரும் அவர் தற்போது பாட்மிண்டன் விளையாடி கோப்பை வென்று இருக்கும் புகைப்படங்களை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டு இருந்தார். நடிப்பையும் தாண்டி அவருக்கு இவ்வளவு திறமை இருக்கிறதா என ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டி வந்தாலும் ஒரு சில எதிர்மறையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், சவுக்கு சங்கர் நிவேதா பெத்துராஜ் மற்றும் உதயநிதியையும் வைத்து மிக மோசமாக பேசி வந்தார். இதற்கு நிவேதா பெத்துராஜ் மிகவும் மனம் நொந்து என்னை நிம்மதியாய் இருக்க விடுங்கள் என்று கெஞ்சியும் கேட்டுவிட்டார். ஆனால், அவற்றையும் மீறி சவுக்கு மீண்டும் அவரை சீண்டி வருகிறார். அதிலும், நேற்று சன் நியூஸில் நிவேதா குறித்து போட்ட போஸ்ட் எல்லாம் எடுத்து இதுக்கு அக்ரீமெண்ட் ஏதாவது போட்டு இருக்கீங்களா என்று கேட்டுள்ளார். இது நிவேதாவை மேலும் காயப்படுத்தி இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நிவேதா பெத்துராஜ் மற்றும் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்திருந்தபோது, இருவரும் பேட்டியளித்து இருந்தனர். அதில், நடிகை நிவேதா பெத்துராஜ் உதயநிதி எப்படி இருப்பார் என்று பேசியிருக்கிறார். அவர் என்னிடம் ஆட்டிட்யூட் காட்ட மாட்டார். மிகவும் கேரிங்காக இருப்பார் என்று கூறி இன்னுமாங்க உங்களுக்கு புரியவில்லை என்று வெட்கப்பட்டு பேசிய வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு உதயநிதியும் சிரித்தவாறு ரியாக்ஷன் கொடுத்திருப்பதை நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

  • Tirupati CM ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம்.. தலையில் சுமந்து காணிக்கை செலுத்திய முதலமைச்சர்..!!
  • Views: - 162

    0

    0