டுவிட்டரில் தாறுமாறாக வைரலாகும் #OurLeaderVIJAY ஹேஷ்டேக்!

7 March 2021, 10:30 pm
Quick Share


தளபதி விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், #OurLeaderVIJAY என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். ஆரம்ப காலம் முதலே இளைய தளபதி விஜய் ரசிகர் மன்றத்தை வைத்துள்ளார். நாளடைவில், அதனை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் மாவட்டந்தோறும், நிர்வாகிகள், உறுப்பினர்களை நியமித்துள்ளார். எப்படியாவது தனது மகன் விஜய்யை அரசியலில் இறக்கிவிட வேண்டும் என்று முனைப்போடு இருந்த இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர், அண்மையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதற்கு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.


ஆனால், அதற்கு விஜய்யிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவே, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி துவங்குவதை நிறுத்தினார். ஆனால், அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சி துவங்குவதாக தகவல் வெளியானது. தற்போது, காமராஜர் அண்ணா மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகி வருகிறது.

எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது.

இதன் காரணமாக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமானது, அரசியல் கட்சிக்கு சமமானது. ஆதலால், அவரது கட்சிக் கொடியை மறைக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகையை கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், #OurLeaderVIJAY என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக் மூலமாக ரசிகர்கள் தங்களது அன்பையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். அதோடு, இந்திய அளவில் டுவிட்டர் டிரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக்கை 5ஆவது இடமும் பிடிக்கச் செய்துள்ளனர்.

Views: - 500

0

0