கமல் சார் “அந்த படத்த பாத்துட்டு அப்படி பண்ணிட்டார்”.. :வெளிப்படையாக கூறிய பிரபல முன்னணி இயக்குனர்..!

Author: Vignesh
27 January 2023, 10:30 am
Quick Share

ஆரம்பத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரபு சாலமன் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் பிரபு சாலமன் இருந்து வருகிறார்.

prabhu solomon - updatenews360

பின்னர் கண்ணோடு காண்பதெல்லாம் படத்தை தொடர்ந்து கிங், லீ, லாடம் போன்ற பல படங்களை இயக்கிய வந்தாலும் இவரை ரசிகர் மத்தியில் பெரிதும் பிரபலமாக்கியது மைனா திரைப்படம் தான்.

மைனா என்ற திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. மைனா திரைப்படம் வெளியாகி பல விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்தது. இதன் பிறகு பிரபு சாலமன் கும்கி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் மாபெரும் அங்கீகாரத்தை பிரபு சாலமனுக்கு பெற்று கொடுத்தது. இதையடுத்து தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்ததார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

kamal-updatenews360

இதனிடையே அண்மையில் பேட்டி ஒன்றில் உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி பிரபுசாலமன் கூறியதாவது, நடிகர் கரணை வைத்து கொக்கி என்ற திரைப்படத்தை இயக்கிய போது, கமலஹாசனும் கரணும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அந்த படத்தின் ஆடியோ லான்ச்க்கு கமல் சாரை அழைத்திருந்தேன்.

இதனால், அப்போது கமல்ஹாசனுடன் ஒரு அறிமுகம் கிடைத்தது. ஆனால், பெரிய அளவில் கிடையாது. அதனால் அவருடன் கை மட்டும் தான் குலுக்கினேன். பின்னர் சில வருடங்கள் கழித்து மைனா படத்தின் ஆடியோ லான்ச்க்கு கமல் சாரை அழைத்திருந்தேன். ஆனால் அவரோ படத்தை பார்த்துவிட்டு தான் வருவேன் என்று தெரிவித்திருந்தார்.

prabhu solomon - updatenews360

இதனால் மைனா படத்தை கமல் சார் பார்ப்பதற்கான வேலைகளை செய்தேன். படத்தை பார்த்து விட்டு கமல் சார் கண் கலங்கிய படியே வெளியே வந்தார். இதன் பிறகு அரை மணி நேரம் அவர் என்னை சந்தித்து பேசினார் . இதையடுத்து கமல்ஹாசன் மைனா படத்தின் ஆடியோ லான்ச்சில் படத்தை பார்த்துவிட்டு இரண்டு நாட்கள், நான் தூங்கவே இல்லை என்று தெரிவித்தார்.

prabhu solomon - updatenews360

அதிலிருந்து கமல் சார் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவது வழக்கம். மேலும் அவரை வைத்து கூட ஒரு படம் பண்ண இருந்தேன். ஒரு சில காரணங்களால் அந்த படம் நடக்க முடியாமல் போய்விட்டது. விரைவில் கமல் சாரை வைத்து ஒரு படத்தை பண்ணுவேன் என்று இயக்குனர் பிரபு சாலமன் தெரிவித்திருந்தார்.

Views: - 153

0

0