22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல ஹீரோவுடன் இணையும் ஐஸ்வர்யா ராய் !

6 November 2020, 4:12 pm
Quick Share

ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக தமிழில்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகினார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.

தற்போது, ஐஸ்வர்யா ராய் மீண்டும், தமிழில் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். அதற்கு பதில் சொல்வது தற்போது பிரசாந்த் நடிப்பில், பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் Fredrick இயக்க போகும் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயிடம் கேட்டுள்ளார்கள்.

அவர் சம்மதம் தந்துவிட்டால் ஜீன்ஸ் படத்துக்குப் பிறகு பிரசாந்தும் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் நடிக்கும் படமாக இது இருக்கும். இதனால் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 35

0

0