பதாய் ஹோ தமிழ் ரீமேக்கில் ப்ரியா ஆனந்த்? அதுவும் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடி?

2 March 2021, 2:47 pm
Quick Share

பதாய் ஹோ என்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் பதாய் ஹோ. இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா, சன்யா மல்ஹோத்ரா, நீனா குப்தா, ஹஜ்ரஜ் ராவ், சுரேகா சிக்ரி, அல்கா கௌசால் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் ரூ.220 கோடி வரையில் வசூல் குவித்தது. இப்படியொரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய நம்ம மூக்குத்தி அம்மன் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார். அதோடு, இந்தப் படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

பதாய் ஹோ தமிழ் ரீமேக் படத்திற்கு வீட்ல விஷேசங்க என்று டைட்டில் வைக்கவும் ஆர் ஜே பாலாஜி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்க இருப்ப தாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆர் ஜே பாலாஜிக்கு எல்கேஜி படத்தில் ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Views: - 121

0

0