TRP-யில் ராகவா லாரன்ஸ் படத்துடன் மோதி தோற்ற பிகில் !

26 November 2020, 7:29 pm
Quick Share

ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு, இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளன.

சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் மக்களுக்கு பொழுது போக முடியாமல் டிவியில் போடும் எல்லா படங்களையும் பார்த்து விசிலடித்து மகிழ்கின்றனர்.

இந்தநிலையில், அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த 2 வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட விஜய்யின் பிகில் படத்தைவிட ராகவா லாரன்ஸ் நடித்து தோல்வியடைந்த மொட்ட சிவா கெட்ட சிவா படம் நல்ல TRP பெற்றுள்ளது.

Views: - 32

0

0